- முதல் அமைச்சர்
- சென்னை பெருநகர போலீஸ்
- ட்விட்டர்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியம்
- உள்நாட்டு விவகாரங்கள்
- சென்னை கலைவாணர் அரங்கம்...
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் உள்துறை சார்பில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினர். அப்போது காவலர்களுக்காக அவர் சிறப்புரையாற்றினர். அந்த சிறப்புரையை சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், போலீசில் சேருவது எவ்வளவு கடினம் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘குள்ளநரிகூட்டம்’ திரைப்படத்தில் நடிகர் சூரி பேசிய சில காட்சிகளுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் காவலர்கள் பணி குறித்து பேசிய காட்சிகளும் இணைக்கப்பட்டு ‘ஒரு நிமிடம் 32 வினாடிகள்’ ஓடக்கூடிய வீடியோ காட்சி பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில் முதல்வர் பேசும் போது: ‘இந்த இடம் உங்களுக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. போலீஸ் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்காக படித்து, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தேர்வுகள் எழுதி, அதில் வெற்றி பெற்று, பல லட்சம் பேர்களில் இருந்து, நீங்கள் 3,359 பேர், இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நான் ஒரு அறிவுரை தர விரும்புகிறேன். வேலையை கவனிக்கும் அதே நேரத்தில், உங்கள் உடல் நலனையும், உள்ள நலனையும் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்; குடும்பத்திற்காகவும் நேரம் செலவிடுங்கள்.
நவீன காலகட்டத்தில் ஏற்றதுபோல, தொழில்நுட்ப ரீதியாகவும் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்’. என்று பேசினார். முதல்வரின் இந்த பேச்சு தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை மிக பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. சென்னை பெருநகர காவல்துறை டிவிட்டரில் முதல்வர் பேச்சு பதிவிட்ட 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், அவர்கள் முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
The post சென்னை பெருநகர காவல்துறை டிவிட்டரில் போலீசார் குறித்து முதல்வர் பேசிய வீடியோவை 1 லட்சம் பேர் பார்வை appeared first on Dinakaran.