தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்ய கூடுதல் பணியாளர்களை எம்.ஆர்.பிக்கு கொடுத்து விரைவாக நிரப்படும். மேலும் வழக்குகளினால் பல்வேறு பதவி உயர்வு தடைபட்டு இருந்தது. வழக்கு தீர்வுக்கு வந்து ஒரு வாரகாலமாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 296 உதவி பேராசிரியர்கள் இணை பேராசியர்களாக உயர்வு பெற்றுள்ளனர். 110 பேர் இணை பேராசியர்கள் பேராசியராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இணை இயக்குனர்களாக இருந்த 4 பேருக்கு கூடுதல் இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு வாரகாலத்தில் 428 பேர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக பணியாற்றிய தொகுபப்பூதிய செவிலியர்கள் 1,200 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 14-15 நாட்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஆணை தயாராக உள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய 940 பேருக்கு தொக்குப்பூதிய அடிப்படையில் இணைகிறார்கள். பின்னர் சிறிது காலத்தில் நிரந்தர பணியில் இணைவார்கள். டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 2,140 பேருக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி 2ம் தேதி கிண்டி மருத்துவ பல்கலைகழகத்தில் நடைபெறுகிறது.
ஒரு வாரகாலத்தில் மட்டும் 428 மருத்துவர் பதவி உயர்வு,2,553 மருத்துவ காலிபணியிடங்களுக்கு தேதி முன்க்கூடியே அறிவிக்கப்பட்டுள்ளது.2, 140 பணி ஆணை விரைவில் தரவுள்ளோம். மேலும் மருத்துவர் சங்கத்தினர் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பு புறக்கணிப்பு என்ற தகவல் தவறானது. மேலும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவர் மறுப்பு அறிக்கைக்கொடுக்கவுள்ளார். காலிப்பணியிடங்கள் குறித்து வெளிப்படையாக அறிவுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அரவிந்த், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஜன.5ல் தேர்வு 2,140 செவிலியர்களுக்கு டிச.2ம் தேதி பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.