×
Saravana Stores

போலி ஆவணம் மூலம் ரூ.2.60 கோடி கடன்; உடந்தையாக இருந்த முன்னாள் வங்கி உதவி பொது மேலளார் கைது

சென்னை: வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.2.60 கோடி கடன் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் Bank of Baroda வங்கி உதவி பொது மேலளார் கைது செய்யப்பட்டுள்ளார். லினா கோஹைன் உதவி பொது மேலளார், தலைமை கிளை, பாங்க் ஆப் ப்ரோடா வங்கி, என்பவர் அளித்த புகாரில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெற்ற Lemooria Foods Pvt.Ltd இயக்குனர் மற்றும் இராஜலட்சுமி, சதிஷ்பாபு ஆகிய 3 பேரும் கூட்டாக சேர்ந்து வங்கியில் Term Loan ஆக Rs.2.60 கோடி கடன் பெற்று, அதில் ரூ.1.80 கோடி கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை காவல் ஆணையாளர் A.அருண், உத்தரவின்பேரில், மேற்கொண்ட விசாரணையில், மேற்படி எதிரிகள் இராஜலட்சுமி, சதிஷ்பாபு மற்றும் ராஜா என்பவர்கள் வங்கியை ஏமாற்றும் நோக்கில் Lemooria Foods Pvt.Ltd நிறுவனத்தின் பெயரில் டிரிங்க் ஜீஸ் மற்றும் ஜீஸ் பவுடர் தயாரிக்கும் ஆலையை அமைக்க போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் Term Loan கடனாக ரூ.2.60 கோடி பெற்று அதில் ரூ.1.80 கோடி வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது தெரியவருகிறது. இதில் எதிரிகள் ராஜலட்சுமி, சதிஷ்பாபு மற்றும் ராஜா மூவரும் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இவ்வழக்கில் விசாரணையில் முக்கிய குற்றவாளியான இராதாகிருஷ்ணன் (AGM.Rtd) Bank of Baroda என்பவர் Lemooria Foods Pvt.Ltd நிறுவனம், வாங்காத இயந்திரங்களை வாங்கியதாக காட்டி Term Loan கொடுத்துள்ளார் என்று தெரியவருகிறது. காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில் வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் தலைமறைவாக இருந்த எதிரியை நீண்ட நாட்களாக தேடி வந்த நிலையில் 27.11.2024ம் தேதி ஹைதராபாத்தில் மேற்படி வழக்கில் முக்கிய குற்றவாளியான இராதாகிருஷ்ணன், ஆ/வ.61, /பெ.பமிடிபதி (AGM.Rtd), Bank of Baroda என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட இராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post போலி ஆவணம் மூலம் ரூ.2.60 கோடி கடன்; உடந்தையாக இருந்த முன்னாள் வங்கி உதவி பொது மேலளார் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bank of Baroda ,Lina Cohen ,Assistant General Councillor ,Bank of ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்யாவிடில் ஆசிட் வீசுவேன்: இளம்பெண்ணுக்கு வாலிபர் மிரட்டல்