×
Saravana Stores

மணிப்பூரில் வன்முறை நடந்த 13 நாள்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு!!

இம்பால் : மணிப்பூரில் வன்முறை நடந்த இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து கடந்த 16ம் தேதி அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருந்து காணாமல்போன 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களை குகி தீவிரவாதிகள் கடத்தியதாக மெய்டீஸ் சமூகத்தினர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், உடல்கள் மீட்கப்பட்ட பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்து.

இதில் முதல்வர், எம்பி, எம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அங்கு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர் பதற்றம் நிலவியதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வன்முறை நடந்த இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் 13 நாள்களுக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்று மாநில அரசு ெதரிவித்துள்ளது.

The post மணிப்பூரில் வன்முறை நடந்த 13 நாள்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Imphal Valley ,Jiribam district ,Ziribam district ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேசத்தில் சம்பல்...