×
Saravana Stores

திருமணம் செய்யாவிடில் ஆசிட் வீசுவேன்: இளம்பெண்ணுக்கு வாலிபர் மிரட்டல்


அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் நேற்று அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தி.நகர் பகுதியில் வசித்து வருகிறேன். சிஏ படித்து வரும் எனக்கும், அதே பகுதியில் தனது உறவினர் குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்ட திருமுருகன் (36) என்பவர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தினமும் டார்ச்சர் செய்து வந்தார். அதனால் வீட்டை காலி செய்துவிட்டு அமைந்தகரையில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். அங்கு வந்தும் டார்ச்சர் செய்தார்.

இதனால் கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்தேன். அங்குவந்தும் தொல்லை கொடுத்தார்.திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உனது முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் என மிரட்டுகிறார். அவரது தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே, திருமுருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிகின்றனர்.

The post திருமணம் செய்யாவிடில் ஆசிட் வீசுவேன்: இளம்பெண்ணுக்கு வாலிபர் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Nitakarai ,Chennai ,Nitakarai police station ,D. Nagar ,CA ,
× RELATED முகத்தில் ஆசிட் வீசுவதாக பெண்ணுக்கு மிரட்டல் வாலிபருக்கு போலீஸ் வலை