×
Saravana Stores

உத்தரப் பிரதேசத்தில் சம்பல் மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் சம்பல் மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்​பட்​ட​தாகப் புகார் எழுந்​துள்ளது. இங்கு விஷ்ணு​வின் கடைசி அவதா​ரமான கல்கி​யின் கோயில் இருந்தது என சம்பல் நீதி​மன்​றத்​தில் மனு அளிக்​கப்​பட்​டது. கடந்த நவம்பர் 19-ம் தேதி அந்த மனுவை விசா​ரித்த சிவில் செஷன்ஸ் நீதிபதி, அதே தினத்​தில் தொல்​லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தர​விட்​டார். அதன்படி மசூதி​யில் நடை பெற்ற ஆய்வு மீண்​டும் கடந்த நவம்பர் 24-ம் தேதி நடைபெற்​றது.

ஆனால் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதியில் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு திரண்டு இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்​தனர். இதையடுத்து சம்பல் பகுதியில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. இந்த நிலையில், தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவிற்கு எதிராக மசூதி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, சம்பல் மசூதியில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கிய மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் மசூதி நிர்வாகம் அலஹாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

The post உத்தரப் பிரதேசத்தில் சம்பல் மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Sambal Mosque ,Uttar Pradesh ,DEPARTMENT ,Jama ,Mosque ,Samphal, Uttar Pradesh ,Vishnu ,
× RELATED புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு...