மயிலாடுதுறை: மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அபிநாத்(20). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தனது தந்தையுடன் சிறுமி வந்து புகார் செய்தார். அதில், கடந்த 25ம் தேதி தன்னை அபிநாத் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி, மயிலாடுதுறை கோர்ட் முன் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் அபிநாத்தை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் துன்புறுத்தலில் அபிநாத் ஈடுபடுவதற்கு உடந்தையாக இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.