×
Saravana Stores

பேசிவிட்டு தருவதாக கூறி வியாபாரியிடம் செல்போன் திருட்டு: திருவள்ளூர் வாலிபர் கைது

ராணிப்பேட்டை: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபு(32). வைக்கோல் வியாபாரி. இவர் கடந்த 23ம்தேதி ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதிக்கு வந்தார். அங்கு வைக்கோல் வாங்கி அதனை லாரியில் மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர், அவசரமாக ஒருவரிடம் போன் பேசவேண்டும் எனக்கூறி செல்போன் கேட்டார். அவரிடம் பிரபு தனது செல்போனை கொடுத்தார். இதையடுத்து செல்போனில் யாரிடமோ பேசியபடி நடித்த அந்த வாலிபர், திடீரென மாயமானார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்றிரவு போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூரை சேர்ந்த சுரேஷ்(35) என்பதும், இவர் பிரபுவிடம் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செல்போனை பறிமுதல் செய்தனர்.

The post பேசிவிட்டு தருவதாக கூறி வியாபாரியிடம் செல்போன் திருட்டு: திருவள்ளூர் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags :
× RELATED மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் ஆம்ஆத்மி எம்எல்ஏ கைது