×
Saravana Stores

தூத்துக்குடி பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு: கணக்கில் வராத ரூ1.60 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்குள்ள கீழுர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு அதிகளவில் லஞ்சம் பெறுவதாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் நேற்று மாலை திடீரென கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். போலீசார் உள்ளே சென்றதும் அலுவலகத்தை பூட்டினர். அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த அனைவருடைய செல்போன்களும் கைப்பற்றப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டன.

பின்னர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், சார்பதிவாளர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதில் சார்பதிவாளர்கள் அறை, அலுவலக அறை, வீடியோ கான்பரன்சிங் அறை, பதிவேடுகள் அறை என அனைத்து அறைகளிலும் சோதனை நடந்தது. இரவு 7 மணி வரையில் இந்த சோதனை நடந்தது. அப்போது, அங்கு சுமார் 4 லட்சத்திற்கு மேல் பணம் இருந்தது. இருப்பினும் இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இருந்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர். தனையடுத்து கணக்கில் வராத பணத்தையும், சில முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடி பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு: கணக்கில் வராத ரூ1.60 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin Securities Office ,Thoothukudi ,Thutukkudi District Corruption Prevention and Monitoring Unit ,Kiglar Sar Registrar ,Thoothukudi Securities Office Raid ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி சங்கரப்பேரியில்...