புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பச்சைநாயக்கன்குளத்தை சேர்ந்தவர் பாக்கியசெல்வி(62). இவரது மகன் ஐயப்பன். வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். ஐயப்பன் மனைவி தங்கலட்சுமி(35). கடந்த 9ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் 2 மர்ம நபர்கள் இவர்களது வீட்டுக்குள் புகுந்து பாக்கியசெல்வி, மருமகள் தங்கலட்சுமியை கட்டிப்போட்டு 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். ந்நிலையில் நேற்று போலீசார் கறம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரி ஆர்ச் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி பைக்கில் வந்த 2 பேரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில், இவர்கள் ராஜசேகர்(31), மகேந்திரன்(34) என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இருவரும் கறம்பக்குடியில் பாக்கியசெல்வி வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. தையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் தங்கியிருந்த லாட்ஜிக்கு சென்று அங்கிருந்த 54 பவுன் நகைகளை கைப்பற்றினர். கைதான இருவர் மீதும் தமிழகத்தில் பல பகுதிகளில் திருட்டு, கொலை, பலாத்காரம் உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கத்திமுனையில் பலாத்காரம்
கைதான ராஜசேகர் பூட்டி கிடக்கும் வீடுகள், தனியாக பெண்கள் உள்ள வீடுகளை திருடுவதற்கு 2 நாட்களுக்கு முன் நோட்டமிடுவார். பின்னர் நேரம் பார்த்து திருட்டில் ஈடுபடுவாராம். அப்படி கொள்ளையடித்து வரும் நகைகளை உடனே விற்காமல், லாட்ஜ்களில் தங்கியிருந்து சில நாட்களுக்கு பின் விற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கொள்ளையடிக்க செல்லும் வீடுகளில் தனியாக இருக்கும், பெண்களை கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
The post 50 பவுன் கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் அதிரடி கைது appeared first on Dinakaran.