தொண்டாமுத்தூர் : கோவை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஸ்டேஷனில் மாடுகளை கட்டி வைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை ஆலாந்துறை அடுத்த நாதேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் அன்னபூரணி (58). இவரது வீட்டுக்கு அருகில் உள்ள உறவினர் இடத்தில் சோலார் பேனல் அமைத்து இருந்தார். இதுதொடர்பாக அன்னபூரணிக்கும், சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் இருந்த சோலார் பேனலை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால், மாடுகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை எனக்கூறி 6 மாடுகளுடன் ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு அன்னபூரணி வந்தார். மாடுகளை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். ஜனாதிபதி பாதுகாப்புகாக போலீசார் சென்று இருப்பதால் விசாரணைக்கு இன்று வருமாறு கூறியதுடன், உரிய ஆவணங்களை கொண்டு வருமாறு கூறி போலீசார் அவர்களை மாடுகளுடன் திருப்பி அனுப்பி வைத்தனர்.
The post இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஸ்டேஷனில் மாடுகளை கட்டி வைத்த பெண் appeared first on Dinakaran.