×
Saravana Stores

ஃபெங்கல் புயல் எதிரொலி… நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம்: மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

நெல்லை: நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படும் நிலையில் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நெல்லையில் 1500க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும், குமரி, தூத்துக்குடியில் 2,500க்கும் அதிகமான நாட்டுப்படகுகள் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் சுமார் 4 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஃபெங்கல் புயல் எதிரொலி… நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம்: மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Nellai, ,Kumari, Tuticorin ,Nellai ,Kumari ,Tuticorin ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED மீண்டும் மீண்டும் மாறும் கணிப்புகள்.....