மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிராவில் அரசு பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டு யாரும் நிலையில், அதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் ஆகும் நிலையில், முதலமைச்சர் யார் என்பதே தெரியாத நிலை உள்ளது. முதலமைச்சருக்கான போட்டியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே விலகிவிட்ட நிலையில், பாஜக-வில் இருந்துதான் முதமைச்சர் வருவார் என தேவேந்திர பட்னாவிஸுக்கு அதிக வாய்ப்பு என தெரியவருகிறது.
ஆனால் அதை வெளிப்படையாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இத்தனைக்கும் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில், ஷிண்டேவே இடைக்கால முதல்வராக நீடிக்க ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். உரிய முறையில் கூட்டணியை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவே தாமதம் என்றும், முதலமைச்சர் யார் என்பது போன்ற குழப்பங்கள் காரணம் பிரதானமாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக அமைச்சர் பதவி பகிர்வில் எந்த கசப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மக்களவை சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் அஜித் பவார், ஷிண்டே உடனான சமன்பாடுகள் மாறியுள்ள நிலையில் அதற்கேற்ப அமைச்சர்கள் துறைகள் பகிர்வு இருக்க வேண்டும் என பாஜக கருதுவதாக கூறப்படுகிறது. அமித்ஷா தலைமையில் நேற்று ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனையில் கூட அமைச்சர்கள், துறைகள் பகிர்வு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
The post தாமதமாகும் மஹாராஷ்டிர முதல்வர் பதவியேற்பு.. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரகாலமான நிலையில் அதற்கு காரணம் என்ன? appeared first on Dinakaran.