×
Saravana Stores

முதியவர் கொலை வழக்கில் மாஜி ராணுவவீரருக்கு 10 ஆண்டு சிறை

தென்காசி : தென்காசி அருகே கணவன், மனைவி தகராறை விலக்க வந்த முதியவரை தாக்கி கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட கோவிந்தராஜ் மகன் ஏழுமலை (48). முன்னாள் ராணுவ வீரரான இவர் தென்காசியை அடுத்த மேல மெஞ்ஞானபுரம் ஸ்டார்நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவருக்கும் இவரது மனைவி கலாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தனது குழந்தைகளுடன் மேலமெஞ்ஞானபுரம் அண்ணா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6.2.2022 அன்று ஏழுமலை மனைவி கலா வசித்து வரும் அண்ணாதெரு வீட்டிற்கு வந்து ஹோட்டல் தொழில் செய்ய தங்க நகை வேண்டும் என்று கேட்டு மனைவி கலாவிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த அதே அண்ணாதெரு பகுதியில் வசித்து வந்த சாமுவேல் (72) என்ற முதியவர் அவர்களை சமாதானப்படுத்தி விலக்கு தீர்க்க முயன்றுள்ளார்.

அப்போது ஏழுமலை அருகில் கிடந்த கம்பை எடுத்து சாமுவேலை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சாமுவேல் சில தினங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றாலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார், ஏழுமலைக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜரானார்.

The post முதியவர் கொலை வழக்கில் மாஜி ராணுவவீரருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Govindaraj ,Kanchipuram ,
× RELATED வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம்...