இந்நிலையில், இனி அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றும், மிதமான மழை மட்டுமே பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வரும் நிலையில், இன்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதாக பதிவிட்டுள்ளர். அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில் வானிலை புகைப்படங்களை குறிப்பிட்டு, ” மேகங்களை கவனியுங்கள், அதன் அமைப்பு தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் தீவிரமடையும் அதன் வலிமையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் காற்றின் வேகம் அதிகரிக்காது. ஆனால், மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. நண்பகல் வேளையில் மேகங்கள் சூழ தொடங்குவதால் மழை தொடங்கும். மாலை மற்றும் இரவு வரை மழை பொழியும் வாய்ப்புள்ளது. 29 முதல் 30-ம் தேதி வரை சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு முதல் மரக்கண்ணம் வரையிலான கடலோரப் பகுதிகளில் மிக கனமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக 30ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் மழை குறித்து கண்காணிப்பு தேவை. இந்த மழை தீவிரம் குறித்து வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.” என பதிவிட்டுள்ளார்.
The post காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் தீவிரமடையும்.! 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு: பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.