கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை, செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கும் மாறாக மிகக் குறைந்த வேகத்திலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்த நிலையில் தற்போது புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்குள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னை, செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: