ஊட்டி பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் அமைச்சர் திடீர் ஆய்வு

 

ஊட்டி, நவ.29: ஊட்டியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக நேற்று முன்தினம் வந்தார். இவரை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார். ஊட்டிக்கு வந்த ஜனாதிபதியை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்றார்.

தொடர்ந்து, ஊட்டி கோத்தகிரி சாலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர்கள் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, உணவுக்கூடம், செம்ெமாழி நூலக அறை ஆகியவைகளை பார்வையிட்டார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம், உணவு பொருட்கள் இருப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு போர்வைகள் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கினார்.

ஆய்வின் போது, மாணவர்கள் சார்பில் தங்குவதற்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும். குளியல் அறை, கழிவறைகள் கூடுதலாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர், அடிப்படை வசதிகள் நிறைவேற்றுதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் கண்ணன், விடுதி காப்பாளர் வேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

The post ஊட்டி பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் அமைச்சர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: