பெ.நா.பாளையம், நவ.29: கோவை, துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கணபதி கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் புகுந்தது. ஒரு வீட்டின் முன்பு வளர்க்கப்பட்டு இருந்த வாழை கன்றை பிடுங்கி கொண்டு சிறிது தூரம் சென்று சாப்பிட்டு விட்டு சென்றது. இந்த காட்சி அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சத்தம் இல்லாமல் புகுந்து வாழை கன்றை தூக்கி செல்லும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். பெரும்பாலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் யானைகளால் மனித உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே வனத்துறையினர் இப்பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து ெசன்று யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வீட்டின் முன்பு உலா வந்த காட்டு யானை appeared first on Dinakaran.