×
Saravana Stores

திருவாரூரில் மழை ஓய்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்

திருவாரூர், நவ. 29: வங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் அடைமழை பெய்ததால் பொது மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர். சிறிய கடைகள் மற்றும் சாலையோர கடைகள் அனைத்தும் மதியத்துடன் பூட்டப்பட்டன. நேற்று இந்த மழை ஓய்ந்ததையடுத்து சாலையில் பொது மக்கள் நடமாட்டம் வழக்கம் போல் காணப்பட்டதால் வர்த்தக நிறுவனங்களும் வழக்கம் போல் இரவு வரையில் திறந்திருந்தது.

The post திருவாரூரில் மழை ஓய்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Bay of Bengal ,Mayiladuthurai ,Nagai ,Thanjavur ,
× RELATED அதி கனமழை எச்சரிக்கை டெல்டா...