×
Saravana Stores

கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

களக்காடு, நவ.29: களக்காடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் களக்காடு அருகே உள்ள பறையன்குளம் அருகே ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்தார். இதைக்கண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர் தலா 10 கிராம் எடைகொண்ட இரு கஞ்சா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ரமேஷ் மகன் தினேஷ் (22) என்பதும், கஞ்சா பாக்கெட்டுகளை அவர் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalakkadu ,Special ,-Inspector ,Suresh Kumar ,Parayankulam ,
× RELATED நாங்குநேரி அருகே சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி