×
Saravana Stores

துணை முதல்வர் பிறந்தநாள் விழாவில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், அத்திப்பட்டு கிளைச் செயலாளர் கதிர்வேல், ஊராட்சிமன்ற தலைவர் சுகந்தி வடிவேல் ஆகியோர் ஏற்பாட்டில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில், அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து திமுக கொடியினை ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

தொடர்ந்து, அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கிழக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் ராஜ் வழங்கினார். இதில் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கோயில் குருக்கள், பழங்குடி மக்கள், முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலையும், கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழியும் வழங்கப்பட்டது.

விழாவில், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாணன், வல்லூர் தமிழரசன், முன்னாள் கவுன்சிலர்கள் வடிவேல், சங்கர், நிர்வாகிகள் தயாளன், முருகானந்தம், ரவி, வெங்கடேசன், கோமதிநாயகம், சாஸ்திரி, பொன்னரசு, மனோகரன், பன்னீர்செல்வம், ரமேஷ், சம்பத், வடிவேல், ரஞ்சனி, ஞானமணி, விஜயா, பரிமளம், தேவி சியாமளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல், மீஞ்சூர் பேரூர் செயலாளர் தமிழ் உதயன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் நிர்வாகிகள் சசிகுமார், வக்கீல் சுரேஷ், புருஷோத்தமன், ஜோசப், திருப்பதி, வெங்கடேசன், மணிமாறன், கதிரவன், தாஸ், இளங்கோவன், கோபால், சதீஷ், எழிலரசன், முத்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி தலைமையில் அத்திப்பட்டு எடப்பாளையம் பகுதியில் உள்ள திமுக கழக கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன், சந்தானம், அன்பு, சாம்ராஜ், தன்ராஜ், சாகுல் அமித், ஹரிஹரன், குமார், சாக்ரடிஸ், சந்தோஷ் குமார், சரவணன், பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருத்தணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திருத்தணி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணன் தலைமையில், புச்சிரெட்டிப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் அகூர்மாணிக்கம், நரசிம்மராஜ், ராமதாஸ், டில்லிபாபு, ஹரிபாபு, இளைஞரணி நிர்வாகிகள் உலகநாதன், விஜய், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி குமார், ஒன்றிய கவுன்சிலர் நீலா கோவிந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

* குழந்தைகளுக்கு மோதிரம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ஊட்டச்சத்து, புத்தாடை ஆகியவற்றை திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். மேலும், அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்கள் 20 பேருக்கு ஊட்டச்சத்து, பழங்கள் புத்தாடைகளை வழங்கினார்.

உடன், பொன்னேரி பேரூர் செயலாளர் ரவிக்குமார், நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், அவைத் தலைவர் பகலவன், மாணவரணி துணை அமைப்பாளர் தமிழரசன், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், பொன்னேரி தீபன், ராமலிங்கம், வாசுதேவன், பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அசோகன், பொன்னேரி நகராட்சி திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்

The post துணை முதல்வர் பிறந்தநாள் விழாவில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Ponneri ,Udhayanidhi Stal ,Athipattu First Level Panchayat ,Meenjoor East Union, Tiruvallur District ,Attipattu ,Kathirvel ,panchayat ,president ,Sukanti Vadivel ,
× RELATED திமுக இளைஞரணி சார்பில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா