×
Saravana Stores

மதுராந்தகத்தில் இன்று லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடக்கவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் உள்ள சூரக்குட்டை ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 25ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 8:15 மணிக்கு மிக விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கடந்த புதன்கிழமை அன்று மாலை மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் எஜமானர் சங்கல்பம், பகவத் பிரார்த்தனை, புண்யாசானம், அங்குரார்பனம், வாஸ்து சாந்தி, யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, வியாழக்கிழமை தினமான நேற்று காலை புண்ணியாசானம், கும்பாராதனம், யாக பூஜை, பூரணாதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக தினமான இன்று காலை 7மணி அளவில் விஸ்வரூபம், கும்பாராதனம், யாக பூஜை, கும்பம் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகளுடன் 8:15 மணி அளவில் கோபுர கலசங்களுக்கும் 43 அடி உயர உக்கிர நரசிம்மர் சிலைக்கு பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்க உள்ளார். மேலும், மகாதீபாரதனை நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. காலை 11 மணி அளவில் ஸ்ரீதேவி, பூதேவி சத்தியநாராயணா பெருமாள் வீதி உலா நடைபெறும். இதனைத்தொடர்ந்து, ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்மர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி வேணுதாஸ சாமிகள் உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

The post மதுராந்தகத்தில் இன்று லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Lakshmi ,Narasimma Swami Temple ,Kumbapishekam ,Madurandakha ,Maduranthakam ,Srilakshmi ,Narasimma ,Swami Temple ,Maduranthaka ,MAHA KUMBAPHISHEKA CEREMONY ,SURAKUTTA ,SRILAKSUMI NARASIMMA SWAMI TEMPLE ,MADURANDAGAM CITY ,CHENGALPATTU DISTRICT ,Lakshmi Narasimma Swami Temple ,
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி...