விசாரணைக்கு சென்ற போது டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சரமாரி அடி: ஒருவர் கைது


புதுடெல்லி: டெல்லியில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. இதனை அடிப்பபடையாக வைத்து சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில், மேற்கு டெல்லியில் உள்ள பிஜ்வாசன் பகுதியை சேர்ந்த சிஏ அதிகாரி அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரது பண்ணை வீட்டில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சுராஜ் யாதவ் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். அப்போது, வீட்டிற்குள் வர விடாமல் அதிகாரிகளை அசோக் குமார் மற்றும் அவரது உறவினர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அதையும் மீறி உள்ளே சென்ற அதிகாரிகளை அசோக்குமார், அவரது உறவினர் யாஷ் ஆகியோர் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அதில், அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்களும் நொறுக்கப்பட்டன. தாக்குதல் சம்பவம் குறித்து கபஷேரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய யாஷை கைது செய்தனர். இவருக்கும் ஆன்லைன் மோசடியில் தொடர்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post விசாரணைக்கு சென்ற போது டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சரமாரி அடி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: