மத மோதலை உருவாக்கும் வகையில் பேச்சு பாஜ நிர்வாகி இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ புகார்

சென்னை: வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திட வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கலந்து கொண்டு 2 கோரிக்கைகளுக்கு ஆதரவாக பேசினார். அவர் பேசியதை வன்மத்துடன் திரித்து சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் பற்றியும் சமூக வலைதளங்களிலும், பொது இடங்களிலும், ஊடகங்களிலும் பாஜவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம், தொடர்ச்சியாக அவதூறாக பேசி வருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post மத மோதலை உருவாக்கும் வகையில் பேச்சு பாஜ நிர்வாகி இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ புகார் appeared first on Dinakaran.

Related Stories: