×
Saravana Stores

இலங்கையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொழும்பு: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வௌியிட்ட அறிவிப்பில், “வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இது கிழக்கு மாகாணத்தை பாதித்துள்ளது. கனமழை, கடும் காற்று காரணமாக கொழும்பு செல்லும் ஆறு விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. வியாழன் காலை 8 மணி நிலவரப்படி கனமழை வௌ்ளத்தால் 91 மாவட்டங்களில் உள்ள 98,000 குடும்பங்களை சேர்ந்த 3,30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Bay of Bengal ,Sri Lanka Disaster Management Center ,Dinakaran ,
× RELATED இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமனம்..!!