×
Saravana Stores

மாநில அளவிலான வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த பயிற்சி: அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை எழும்பூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சமத்துவம் காண்போம் என்கிற மாநில அளவிலான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் விதிகளை பற்றிய பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்து பயிற்சிக்கான கையேட்டினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: அனைத்து அலுவலர்களுக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் விதிகளை அனைத்து நிலை அலுவலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் விரிவான பயிற்சி அளிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். இதன்மூலம் வன்கொடுமை வழக்குகளை கையாள்வதில் அனுபவம் பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, டி.ஹரி பரந்தாமன், வழக்கறிஞர் கே.திலகேஸ்வரன், சபாய் கரம்சாரி இயக்க தேசிய உறுப்பினர் தீப்தி சுகுமார், சென்னை சமூகப்பணி கல்லுரரி புலத்தலைவர் ஆர்.சுபாஷினி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவர் மகேந்தர் குமார் ரத்தோர்ட், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post மாநில அளவிலான வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த பயிற்சி: அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Madivendan ,Chennai ,Adi Dravidar and Tribal Welfare Department ,Mathiventhan ,Egmore, Chennai ,
× RELATED திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்