சென்னை, வள்ளூவர் கோட்டம் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

* அரசாணை எண். 116, நாள் 13.7.2023
* திட்ட மதிப்பீடு ரூ.80.00 கோடி
* ஒப்பந்ததாரர் : P&C பிராஜக்ட், ஈரோடு
* பணி துவக்கம் : 18.1.2024
* பணிக்காலம் : 12 மாதங்கள்
* பணி முடிக்க இலக்கு : 15.1.2025

பணியின் தற்போதைய நிலை;
* தோரணவாயில் முகப்பின் ஸ்தபதி பணி நடைபெற்று வருகிறது.
* உணவகம், நிர்வாக கட்டடம் தள கற்கள் பதிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது மற்றும் மின் பணி நடைபெறுகிறது.(80%)
* கலையரங்கம், குறள்மணி மாடம், தோரணவாயில் கட்டடங்களில் மின் பணிகள் நடைபெற்று வருகிது.
* கலையரங்கத்தில் பால்ஸ் சீலிங் பணி மற்றும் வால்பேனலிங் பணி நடைபெற்று வருகிறது.
* பன்னடுக்கு வாகன நிறுத்துமிட கூரை கான்கீரிட் போடப்பட்டுள்ளது.
* இதுவரை மொத்தமாக 75% பணிகள் முடிவுற்றுள்ளது.

வள்ளுவர் கோட்டம் குறித்த குறிப்பு;
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற உலகின் ஒட்டுமொத்த நன்மை தீமை வாழ்க்கை வரலாறுகளை ஒரே வரியில் எழுதிய திருவள்ளூவர் அவர்களுக்காக,
* 5 ஏக்கர் நிலப்பரப்பில் 18.9.1974ல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976-ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
* திருவாரூர் ஆழித்தேரை மாதிரி வடிவமாக கொண்டு கல்தேர், பல்லவ கலை சிற்ப வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டது (உயரம் 128 அடி)
* காந்தார கலை வடிவில் தோரண வாயில் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
* திராவிட கட்டடக் கலை பிரதிபலிக்கும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிற்பி கணபதி அவர்களைக் கொண்டு இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப் பட்டது.

தற்போதைய மேம்பாட்டு பணிகளின் விவரங்கள்;
* கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல்,
* குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல்
* வளாக சுற்றுச் சுவர் புதுப்பித்தல்
* தூண்கள், நுழைவாயில் பகுதிகளில் சிற்ப வேலைபாடுகள்.
* மாற்றுத் திறனாளிகள் நடைபாதை
* முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தேயக மின் தூக்கி
* பலநிலை வாகன நிறுத்துமிடம்
* உணவுக்கூடம், விற்பனை மையம்
* மழைநீர் வடிகால் வசதி
* 2 இலட்சம் கொள்ளளவு நீர் சேமிப்பு தொட்டி அமைத்தல்
* பேவர் பிளாக் பாதை அமைத்தல்
* R* பிளான்ட் அமைத்தல்
* புல்வெளி அமைத்தல்
* செயற்கை நீரூற்று அமைத்தல்
* ஒளி ஒலி காட்சி அமைத்தல்
* சிதிலமைடைந்த மின்சாதனங்கள், மின் இணைப்புகள் மாற்றுதல்
* கூட்ட அரங்கம் மற்றும் குறள்மணி மாடத்தில் குளிர்சாதன வசதி
* தீ தடுப்பு வசதிகள்
* ஒலிபெருக்கி அமைப்பு நிறுவுதல்
* நுழைவாயில் புதுப்பித்தல் பணி
* உயர் அழுத்த மின் வசதி
* 250 கே.வி.ஏ. ஜெனரெட்டர்
* CCTV பொருத்துதல்

The post சென்னை, வள்ளூவர் கோட்டம் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Related Stories: