×
Saravana Stores

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கி.மீ. நகரத் தொடங்கியது

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கி.மீ. நகரத் தொடங்கியது. முன்னதாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியது. நாகைக்கு 310 கி.மீ. தென்கிழக்கிலும் திரிகோணமலைக்கு 110 கி.மீ. கிழக்கு – வடகிழக்கிலும் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 480 கி.மீ. தெற்கு – தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கி.மீ. நகரத் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Began ,Chennai ,Trigonamalai 110 ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்