ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மரக்காணத்தில் 2வது நாளாக கடல் சீற்றம்
மரக்காணம்: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மரக்காணத்தில் 2வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து, 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 3வது நாளாக மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் அப்பகுதிகளில் தரைக்காற்று பலமாக வீசி வருகிறது.