- ஓ. பன்னீர்செல்வம்
- நீதிமன்றம்
- புது தில்லி
- வருவாய் அமைச்சர்
- ஊழல் தடுப்புத் துறை
- ரூ
- உச்ச நீதிமன்றம்
- தின மலர்
புதுடெல்லி: கடந்த 2001-06ம் ஆண்டில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். 2006ல் ஆட்சி மாறியதும் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன், சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ1.77 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைவரையும் விடுவித்தது. சிவகங்கை நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.
அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற, சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது சட்டவிரோதமானது” எனக்கூறி அந்த உத்தரவை ரத்து செய்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நாளை நீதிபதிகள், ஹெச்.ராய் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு நிவாரணம் கிைடக்குமா? என்பது அப்போது தெரியும்.
The post ரூ1.77 கோடி சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிவாரணம் கிடைக்குமா?. .உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை appeared first on Dinakaran.