- டிட்ட்கோ
- பரந்தூர்
- யூனியன் அரசு
- திமுக
- Girirajan
- புது தில்லி
- ராஜ்ய சபா
- சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்
- முரளிதர் மொகல்
- பரந்தூர்
- தின மலர்
புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக எம்.பி. கிரிராஜன் எழுப்பிய கேள்விகளுக்கு, ு சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மொகல் அளித்த எழுத்துப்பூர்வ பதில்: பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான தள அனுமதி கடந்த ஆகஸ்டு மாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொள்கை ஒப்புதலுக்கான விண்ணப்பம் டிட்கோவிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது.
மேலும் ஓசூரில் பசுமை விமான நிலையத்துக்காக முன்மொழியப்பட்ட 4 தளங்களை விமானநிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் டிட்கோ அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு செய்தது. அந்த பகுதியில் விமானப்படை மையம் இருப்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் கலந்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் தள அனுமதியை வழங்க நிபந்தனைகளுடன் தடையில்லா சான்று வழங்கி இருக்கிறது.
The post பரந்தூர் விமான நிலைய திட்டம் கொள்கை ஒப்புதல் கேட்டு டிட்கோ மனு: திமுக எம்பி கிரிராஜன் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.