×
Saravana Stores

மோடி அவைக்கு வருவதே கிடையாது; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச தொடர்ந்து அனுமதி மறுப்பு: திருச்சி சிவா எம்பி குற்றச்சாட்டு


புதுடெல்லி: மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகிறார். அங்கு இருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தின் உள்ளே அவைக்குள் வருவதில்லை. விவாதத்திற்கு தயாராக இல்லை, யாராவது கேள்வி கேட்டால் எழுந்து பதில் சொல்லும் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்.

அந்த பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்றால் இவர்கள் விவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். நாங்கள் எந்த விவாதத்தை தொடங்கினாலும் அதை பேச அவைத்தலைவர் அனுமதி மறுத்து அவையை ஒத்தி வைக்கிறார். அதானி விசயத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

The post மோடி அவைக்கு வருவதே கிடையாது; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச தொடர்ந்து அனுமதி மறுப்பு: திருச்சி சிவா எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Parliament ,Trichchi Siva ,New Delhi ,Dimuka M. P Trichy Shiva ,Delhi ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றம் கூடும்முன்...