- ராகுல்
- காங்கிரஸ்
- பாஜக
- கர்கா
- புது தில்லி
- மகாராஷ்டிரா
- சட்டசபை
- கார்கே
- தேசிய செய்தி தொடர்பாளர்
- சம்பித் பத்ரா
- கார்க்
புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில்,’ இவிஎம் வேண்டாம். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’ என்றார். இதற்கு பதிலடியாக பா.ஜ எம்பியும், தேசிய செய்தித்தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறுகையில்,’ இவிஎம் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவதன் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா தேர்தல் தோல்வி குறித்து தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகிறார்கள். சிக்கல் இவிஎம் இயந்திரத்தில் இல்லை. காங்கிரஸ் தலைமையில் தான் பிரச்சனை. இவிஎம் நன்றாக உள்ளது. ராகுல் பழுதடைந்துள்ளார். எனவே நீங்கள் வெற்றி பெற ராகுலை மாற்றுங்கள். உங்கள் தோல்விக்கு இவிஎம் காரணம் அல்ல.
ஆர்பிஎம் காரணமாக நீங்கள் தேர்தலில் தோற்றுவிட்டீர்கள், அதாவது ராகுலின் மோசமான நிர்வாகம்(ஆர்பிஎம்) தான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம். தற்போதைய ஒன்றிய அரசையும் நீங்கள் விரும்பவில்லை. ஏனெனில் இது ஒரு நல்ல அரசு அல்ல என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களுக்கு இங்கே எதுவும் வேண்டாம். இவிஎம் வேண்டாம், தேர்தல் ஆணையம் வேண்டாம், அமலாக்கத்துறை வேண்டாம், சிபிஐ, ஐடி, நீதித்துறை, மோடி அரசு என எதுவும் வேண்டாம். அப்படியானால் செவ்வாய் கிரகம் உங்களுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்று நினைக்கிறேன். அங்கே யாரும் இல்லை. ராகுல்காந்தியுடன் நீங்கள் அங்கே செல்லலாம். அங்கிருக்கும் நாற்காலியில் உங்கள் இளவரசரை உட்கார வைத்து சந்தோஷமாக வாழுங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
The post காங்கிரஸ் வெற்றி பெற ராகுலை மாற்றுங்கள் இவிஎம்மை அல்ல: கார்கேவுக்கு பாஜ பதிலடி appeared first on Dinakaran.