×
Saravana Stores

திருநின்றவூர் ரயில் நிலையத்தில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு மையம் திறப்பு

ஆவடி, நவ. 28: திருநின்றவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டுக்காக புதிய பயணச்சீட்டு முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் நகரில் முக்கிய ரயில் நிலையமான திருநின்றவூர் ரயில் நிலையம் 1.5 கி.மீ. நீளம் கொண்டது. இந்த ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள், 6 இருப்பு பாதைகள் உள்ளன. இங்கிருந்து கோமதிபுரம், கொசவன்பாளையம், கொட்டாமேடு, புதுச்சத்திரம், திருமழிசை, நடுக்குத்தகை, பாக்கம், பாக்கம் கிராமம், மேலப்பேடு, புலியூர், புலியூர் கண்டிகை, மேல் கொண்டையார், கீழ்க்கொண்டையார், தாமரைப்பக்கம் உள்ளிட்ட 32 கிராமங்களை சேர்ந்த சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையம் கடந்த 8 ஆண்டுகளாக, ரயில்வே நடை மேம்பாலத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் 48 படிக்கட்டுகள் ஏறி இறங்கி பயணச்சீட்டு பெற கடும் அவதிப்பட்டனர். இதனால், தரைத்தளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐந்தாவது நடை மேடையில், ₹50 லட்சம் மதிப்பில் முன்பதிவு மையம் அமைக்க பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் கடந்த வாரம் முடிந்தது. இதையடுத்து, நடை மேம்பாலத்தில் இருந்த முன்பதிவு மையம், நேற்று முன்தினம் மாலை புது கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post திருநின்றவூர் ரயில் நிலையத்தில் புதிய பயணச்சீட்டு முன்பதிவு மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruninnavur railway station ,Thiruninnavur Railway Station ,Chennai ,Tiruninnavur ,railway station ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்