×
Saravana Stores

இன்னும் 6 மணி நேரத்தில் தமிழகத்தை மிரட்டும் ஃபெங்கல் புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தெரியுமா?

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை நெருங்குகிறது ஃபெங்கல் புயல் சின்னம். கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கில் 530 கி.மீ. தொலைவில் மையம்கொண்டுள்ளது.

தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் 13 கி.மீ-ல் இருந்து 10 கி.மீ.ஆக குறைந்துள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து பின்னர் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும். 4 மாவட்டங்களில் இன்று 21 செ.மீ.க்கு மேல் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு.

இன்று 10 மாவட்டங்களில் கனமழை
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்யும்.

நவ.29,30-ல் மிக கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நவ.29,30-ல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

The post இன்னும் 6 மணி நேரத்தில் தமிழகத்தை மிரட்டும் ஃபெங்கல் புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Bay of Bengal ,India Meteorological Department ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் வெளுத்து வாங்கிய கனமழை