சென்னை- பரங்கிப்பேட்டை இடையே புயல் கரையை கடக்கும் :தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை : வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல் சென்னை- பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என பிரதீப் ஜான் தகவல் அளித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு ஃபெங்கால் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்,

“காற்றழுத்த தாழ்வு நிலை / புயல் நவம்பர் 30 ம் தேதியன்று பரங்கிபேட்டை மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக்கூடும்.

நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும். சென்னைக்கு தெற்கே புயல் கரையை கடப்பதால் , சென்னையின் நீர்ப்பிடிப்புக்கு ஏற்ற மழைப் பொழிவு இருக்கும்.

27-ம் தேதி – சென்னையில் லேசானது முதல் மிதமான மழை – வடக்கு நகர்வு
28-ம் தேதி – சென்னைக்கு நாளை மிதமான மழை – வடக்கு நகர்வு
29 – புயல் மேற்கு திசையில் நகரத் தொடங்கியதும் சென்னைகயில் கனமழைக்கு வாய்ப்பு
30-ம் தேதி – சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழை – மேற்கு நகர்வு
டிசம்பர் 1 – சென்னையில் மிதமான மழை – இழுபறி விளைவு
டிசம்பர் 2 – சென்னையில் மிதமான மழை – இழுபறி விளைவு

“காற்றழுத்த தாழ்வு நிலை / புயல் கரையை கடந்த பிறகு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலம் உள்ளிட்ட உள் மாவட்டங்கள் மழையை அனுபவிக்க முடியும்,”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை- பரங்கிப்பேட்டை இடையே புயல் கரையை கடக்கும் :தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: