×

அனைவருக்கும், அனைத்து நிலைகளிலும் சமூகநீதி என்ற வி.பி.சிங்கின் நோக்கத்தை நிறைவேற்றுவோம்: ராமதாஸ் உறுதி

சென்னை: அனைவருக்கும், அனைத்து நிலைகளிலும் சமூகநீதி என்ற வி.பி.சிங்கின் நோக்கத்தை நிறைவேற்றுவோம் என அவரது 16ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்பட்டு வந்த பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதியை வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் 16-ஆம் நினைவு நாள் இன்று.

தாம் அறிவித்த 27% ஓபிசி இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் வரை தலைநகர் டெல்லிக்குள் நுழைய மாட்டேன் என்று சபதம் ஏற்று, அதன்படி வாழ்ந்து காட்டி சாதித்தவர் அவர். அனைவருக்கும், அனைத்து நிலைகளிலும் சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்பது தான் அவரது விருப்பம். அதை நிறைவேற்ற இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம் என உறுதிமொழி ஏற்றார்.

The post அனைவருக்கும், அனைத்து நிலைகளிலும் சமூகநீதி என்ற வி.பி.சிங்கின் நோக்கத்தை நிறைவேற்றுவோம்: ராமதாஸ் உறுதி appeared first on Dinakaran.

Tags : VP ,Singh ,Ramadoss ,Chennai ,VP Singh ,Bamaka ,Ramdas X ,India ,Ramadass ,Dinakaran ,
× RELATED கூரன் – திரை விமர்சனம்!