2-ம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான ஆளினர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கான இடர்படி ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் காலம்தான் தமிழ்நாடு காவல்துறையின் பொற்காலம். மக்களின் துன்பங்களை தீர்க்க காவல்துறையினர் பாடுபட வேண்டும். குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதுதான் காவல்துறையின் இலக்காக இருக்க வேண்டும். சைபர் குற்றங்கள், போதைப்பொருள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தான் நமக்கு சவாலாக உள்ளன. புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக காவல்துறையினர் நடந்துகொள்ள வேண்டும். உயர் அதிகாரிகள் கீழ்நிலை காவல்துறையினருடன் நட்புணர்வோடு பழக வேண்டும். கீழ் நிலை காவலர்களுக்கு பயம் வரும் வகையில் உயர் அதிகாரிகள் பழகக் கூடாது. மக்களின் நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல் துறையிடம் தான் உள்ளது, “இவ்வாறு தெரிவித்தார்.
The post உலக அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.