பெரியகுளம், நவ.27: பெரியகுளம் வடகரை அரண்மனை தெருவில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தினை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் நகராட்சியின் வடகரை 2வது வார்டில் உள்ள அரண்மனை தெருவில், ரூ.25 லட்சம் செலவில் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட, கடந்த 2022இல் பெரியகுளம் நகராட்சி நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி கடந்த 2023 ஜனவரியில் நிறைவடைந்தது.
தற்போது, ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் முடிவடைந்து இரண்டு வருடங்களாகவுள்ள நிலையில், சுகாதார நிலையம் முன் உள்ள வளாகத்தில் தரைதளம் அமைக்கும் பணி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பெரியகுளம் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஆகையால் இந்த சுகாதார நிலைய வளாகப் பணிகளை விரைவில் மேற்கொன்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பெரியகுளத்தில் சுகாதார வளாகம் திறப்பு எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.