ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

 

மதுரை, நவ. 27: மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அனைத்து விவசாய பொருட்களுக்கும் அறிவித்து சட்டபூர்வ அங்கீகாரத்தை ஒன்றிய அரசு உடனே வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சந்தானம் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து விவசாயிகளின் தற்கொலைகள் தடுத்து நிறுத்த வேண்டும். மின்சாரம் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பும், மின்சார சட்ட திருத்தம் 2022 ரத்து செய்ய வேண்டும், ஸ்மாட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் மற்றும் கால்நடை காப்பீட்டு திட்டம் பொதுத்துறை வங்கி மூலம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

The post ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: