×
Saravana Stores

சரக்கு வாகனம் மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

 

சென்னிமலை, நவ.27: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பிடாரியூரில் இருந்து விஜயமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று மதியம் சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது செந்தாம்பாளையம் மற்றும் கிழக்கு தோட்டம் புதூர் ஆகிய இரு ஊர்களுக்கு இடையே சென்றபோது, சரக்கு வாகனத்தின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின்கம்பம் மீது மோதியது. இதனால் மின் கம்பிகளுடன் மின் கம்பம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

மின் கம்பம் விழுந்தபோது, சமயத்தில் அவ்வழியாக வாகனங்களும், பொதுமக்களும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், முறிந்து விழுந்த மின் கம்பத்தின் மின் கம்பிகளில் தொடர்ந்து மின்சாரம் இருந்ததால் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் முறிந்து விழுந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பத்தை சேதப்படுத்திய சரக்கு வேன் டிரைவர் குறித்து சென்னிமலை போலீசார் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சரக்கு வாகனம் மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennimalai ,Erode District ,Bitariyur ,Vijayamangalam ,Sentampalayam ,East Plantation Budoor ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு