திருவள்ளூர்: என்.என்.கண்டிகை கிராமத்தில் 25 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகை கிராமத்தில் வசித்து வரும் 25 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி திருத்தணி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியருக்கு மனு கொடுத்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. இருப்பினும், இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிட வீட்டுமனைக்கு நிலம் ஒதுக்காமல் காலம் கடத்துகின்றனர். எனவே, 25 பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீல வானத்து நிலவன் மற்றும் கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதனை பெற்று கொண்ட கலெக்டர் த.பிரபுசங்கர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
The post ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.