சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வி.சுதாகர், சொ.வேலு, கோ.ஏகப்பன், பா.ஸ்ரீராமுலு, கே.எஸ்.எம்.நாதன், ராஜேஸ்வரி ஸ்ரீதர், அ.நிர்மலாதேவி, பரிதிஇளம்சுருதி, எல்.சுந்தரராஜன், தெற்கு பகுதி நிர்வாகிகள் எஸ்.ரசூல், டி.வி.வேலு, எம்.மலர்மாறன், கே.அன்னபூரணி, எஸ்.ஜெகதீசன், தெற்கு பகுதி வட்ட செயலாளர்கள் ஆர்.பாபு (எ) சந்திரசேகரன், எஸ்.டால்பின்ஹரி, இ.மொய்தீன், வான்மதி கதிரவன் ஆகியோர் வரவேற்கின்றனர்.
விழாவில் 100 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, 250 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 75 விளையாட்டு குழுக்களை சார்ந்த 375 விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், 500 பெண்கள் அடங்கிய 50 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி, 100 திருநங்கைகளுக்கு நலத்திட்டஉதவிகள், மாற்றுத்திறளாளிகள் 10 நபர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் என 1335 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றுகின்றார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி சார்பில், மனிதநேய உதயநாளை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி, திருநங்கைகளுக்கு நலஉதவி, மாற்றுத்திறளாளிகள் 10 நபர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் என 1335 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்குகிறார்.
நிகழ்வில், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியாராஜன், எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், ப.தயாகம் கவி, அ.வெற்றிஅழகன், ஜோசப் சாமுவேல், ப.ரங்கநாதன், ஓ.ஏ.நாகலிங்கம், மாநில நிர்வாகிகள் கே.எஸ்.ரவிச் சந்திரன், சங்கரி நாராயணன், ப.ரங்கநாதன், எஸ்.மணிமுடி, தமிழன் பிரசன்னா, கே.சந்துரு, பி.கே.மூர்த்தி விசி, வே.உமாகாந்த், சி.மகேஷ்குமார், பரிதிஇளம்சுருதி, எழும்பூர் வடக்கு பகுதி செயலாளர்கள் தி.தயாளன், வி.அபாய், சு.மனோகர், ந.பாலு, ஆர்.எம்.ரங்கநாதன், சி.சேகர் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். வட்ட செயலாளர்கள் வி.விஜயகுமார், ஆர்.பாபு ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.
The post சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வேப்பேரியில் நாளை 1335 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் வழங்குகிறார் appeared first on Dinakaran.