×
Saravana Stores

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்றுவழியில் இயக்க வேண்டும்: அனைத்து கிளை மேலாளர்களுக்கும் எஸ்.இ.டி.சி மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: சுரங்கப்பாதைகள், மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்றுவழியில் இயக்க வேண்டும் என தொலைதூர பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைதூர பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வழுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் எஸ்.இ.டி.சி மேலாண் இயக்குநர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி,

  • சுரங்கப்பாதைகள், மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்றுவழியில் இயக்க வேண்டும்.
  • சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய தொலைதூர பேருந்துகள் காட்டாற்று ஓர சாலைகளில் செல்லும் போது ஓட்டுநர்கள் கவனத்துடன் இயக்க வேண்டும்.
  • தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி பயணிகள் பேருந்துகளை இயக்க சென்னாலும், மாற்று வழியிலேயே பேருந்தை இயக்க வேண்டும்.
  • பணிமனைகளில் மழை நீர் தேங்காகத வகையில் வடிகால்கள் சரியாக உள்ளதாக என்பதை சரிபார்க்க வேண்டும்.
  • பேருந்துகளில், தண்ணீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரியாக இயங்காதது போன்ற பூகார்கள் வந்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என எஸ்.இ.டி.சி மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

The post சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்றுவழியில் இயக்க வேண்டும்: அனைத்து கிளை மேலாளர்களுக்கும் எஸ்.இ.டி.சி மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : S. E. D. C Management ,Chennai ,State Rapid Transport Committee ,Department of Transportation ,S. E. D. C ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் வருவாயை பெருக்கும்...