அசாம் மாநிலத்தில் செயல்பட்ட ‘உல்பா’ அமைப்புக்கு மேலும் 5 ஆண்டு தடை

புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் செயல்படும் உல்பா அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ள அசோம் ஐக்கிய முன்னணி (உல்பா) அமைப்பானது இந்தியாவிலிருந்து அசாம் மாநிலத்தை பிரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1990ம் ஆண்டு முதல் உல்பா அமைப்புக்கு ஒன்றிய அரசு தடை விதித்து வருகிறது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு உல்பா அமைப்பு மற்றும் அதன் பிரிவுகள் பாதகமாக செயல்பட்டு வருகின்றன.

பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள இந்த அமைப்பானது, பொதுமக்களை மிரட்டி நிதிவசூல் செய்தது. அசாம் மாநிலத்தில் 2019ம் ஆண்டு நவ. 27 முதல் நடப்பாண்டு ஜூலை 1ம் தேதி வரையில் சட்டவிரோதமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் கண்ணி வெடிகள் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய உல்ஃபா அமைப்பு மீது 16 குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. உல்பா அமைப்பு மேலும் 27 குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது.

56 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உல்பா அமைப்பினரிடமிருந்து 27 ஆயுதங்கள், 550 துப்பாக்கி குண்டுகள், 9 கையெறி குண்டுகள், 2 கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசாம் ஐக்கிய முன்னணி அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அசாம் அரசு அறிவித்தது. அதனால் உல்பா மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

The post அசாம் மாநிலத்தில் செயல்பட்ட ‘உல்பா’ அமைப்புக்கு மேலும் 5 ஆண்டு தடை appeared first on Dinakaran.

Related Stories: