இதன்காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். இதன்படி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக போதிய முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கனமழை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி,
* நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
* மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையொட்டி இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
* கனமழை காரணமாக காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
* கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
* கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (நவ. 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
The post தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.! தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை appeared first on Dinakaran.