×
Saravana Stores

கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு

 

கோவை, நவ. 26: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் சடையாண்டி. இவரது மகன் அசோக் குமார் (28). இவர், கோவை சிங்காநல்லூர் கமலாமில் குட்டை பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சடையாண்டி செல்போன் மூலம் தனது மகனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த சடையாண்டி, கோவையில் உள்ள அசோக் குமாரின் நண்பர் சுஜித் என்பவருக்கு போன்செய்து, வீட்டிற்கு சென்று பார்க்கும்படி தெரிவித்தார். இதையடுத்து சுஜித், அசோக்குமார் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்தார்.

அப்போது வீட்டு கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அசோக்குமார் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. இந்த தகவல் அறிந்து அங்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

The post கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Sadayiandi ,Bodhinayakanur ,Theni district ,Ashok Kumar ,Kuttai ,Singhanallur Kamalam, Coimbatore ,Dinakaran ,
× RELATED ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக...