மனிதனை மையமாக கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் சென்னை ஐ.ஐ.டியில் துவக்கம்

சென்னை: ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை, மனித ஆற்றலை மேம்படுத்தும் வகையில் மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்கியிருக்கிறது. இந்த மையம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய தொழில்துறை 5.0 (இன்டஸ்டரி 5.0) கொள்கைகளுடன் தொழில்முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவும் வகையில் செயல்படும்.

இணைய பாதுகாப்பு, இணைய மோசடி, தவறான தகவல், பாதுகாப்பு உள்ளிட்ட குடிமக்களை பாதுகாக்கும் அம்சங்களும் இடம்பெறும். நம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாதுகாப்பாகவும், பொறுப்புமிக்கதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் இத்துறையில் எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்னைகளை கண்டறியவும் இந்த மையம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த மையம் வாயிலாக கல்வி, சுகாதாரம், நிதிச்சேவைகள், போக்குவரத்து உள்பட பல்வேறு பயன்பாடுகளில் மனித ஆற்றலை மேம்படுத்த முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மனிதனை மையமாக கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் சென்னை ஐ.ஐ.டியில் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: