×
Saravana Stores

கூட்டுறவு சங்க 36 விற்பனையாளர் பணிக்கு 4,065 பேர் விண்ணப்பம்

சிவகங்கை, நவ.26: சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 36 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 4,065பேர் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் சார்பில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு நேற்று முதல் 5 நாட்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இந்த காலிப் பணியிடங்களுக்கு 4,247 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 182 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,065 பேருக்கு நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அலுவலர்கள் 130 பேர் நேர்காணலை நடத்தினர். நேற்றைய நேர்காணலுக்கு 800 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டதில், 488 பேர் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவு சங்க 36 விற்பனையாளர் பணிக்கு 4,065 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,
× RELATED ஓய்வூதியம் பெறுவதற்கு சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்