அதிவேகமாக டூவீலர் ஓட்டிய 10 பேர் மீது வழக்கு

அரூர், நவ.26: அரூரில் அதிக என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில், வாலிபர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டு அதிவேகமாக ஓட்டி செல்கின்றனர். குறிப்பாக காலை பள்ளி துவங்கும் நேரம், பள்ளி விடும் நேரங்களில் பெரியார் நகர் பள்ளி பகுதிகளில் பெண்கள், பொதுமக்களை பயமுறுத்தும் வகையில், அதிக சத்தத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையொட்டி, அரூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் செந்தில்ராஜ், மோகன், மணிகண்டன், எஸ்ஐ சக்திவேல் மற்றும் காவலர்கள், நேற்று ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விலையுயர்ந்த பைக்குகளில் வேகமாக வந்த 10 பேருக்கு அபராதம் விதித்து, வழக்கு பதிவு செய்து, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

The post அதிவேகமாக டூவீலர் ஓட்டிய 10 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: